மதுரை:
நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட மதுரை மீனாட்சிஅம்மன் கோவில்அர்ச்சகரின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நேற்று செய்தி வெளியானது. அவர் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து, அவருடன் பணியாற்றிய கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள், பட்டர்கள், இணை ஆணையர் நடராஜன், தக்கார் கருமுத்து கண்ணன் என அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் கொரோனோ வைரஸ் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த 71வயது மூதாட்டி (அர்ச்சகரின் தாயார்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel