தேனி:

தாய், அண்ணனை கடப்பாறையால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் சடையால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மனைவி புஷ்பம். விவசாயிகள். இவர்களது மூத்த மகன் சதிஷ்(வயது 35). உடல் நிலை சரியில்லாதவர். 2வது மகன் ஜெயபால் (வயது 33) மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. வயலில் மாடுகளை மேய்த்து வந்தார்.

இந்நிலையில், ஜெயபால் இன்று மதியம் திடீரென அவர்களது ஆட்டு கொட்டகைக்கு தீவைத்தார். வீட்டில் இருந்த மாட்டையும் கடப்பாரையால் குத்தி கொன்றார். தொடர்ந்து வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த தனது சகோதரரையும் கடப்பாறையால் குத்தி கொன்றார். இதனை பார்த்த அவரது தாய் தடுக்க முயன்றார்.

அவரை தள்ளிவிட்டு அவரையும் குத்தி கொன்றார். அவரது செயலை பார்த்த நாய் குரைத்தது. அதனையும் ஜெயபால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் பழனிசெட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து ஜெயபாலை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்களாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் கயிறு உள்ளிட் ட சாதனங்களுடன் வந்து ஜெயபாலை கட்டிக் கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.