காஞ்சிபுரம்:  குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற குன்றத்துர் பகுதியைச் சேர்ந்த  அபிராமியும்  அவரது கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள  மகளிர் நீதிமன்றம்  தாய்  அபிராமிக்கு சாகும்வரை சிறை என அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்  குன்றத்தூர் அருகே கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமியும் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யசம்பவமான குன்றத்தூர் அருகே  மூன்றாம் கட்டளை பகுதியில் இளம்பெண் ஒருவர் இறைச்சி கடை கள்ளக்காதலனுக்கான  தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது அபிராம என்ற இளம்பெண் திருமணத்தை மீறி ஒருவருடன் நெருக்கமான நிலையில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதிய,   குழந்தைகள் அஜய் (வயது 6), கார்னிகா (வயது 4) ஆகியோரை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தந்து கொலை செய்தார்.

விசாரணையில்,   அபிராமிக்கும் அதே பகுதியில் பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 2 குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருமணத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியும், காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனையை விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றதால், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அபிராமி, காதலன் மீனாட்சி சுந்தரம் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, . இருவரும் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் என உறுதி செய்தார்.

இதையடுத்து,  இரு குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி குற்றவாளி என்றும்,  அவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். அபிராமியுடன் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிப்பதாகவும்  காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செம்மல் தீர்ப்பளித்திருக்கிறார்.

திருமணத்தை மீறிய உறவுக்காக, குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு கேரளா தப்பிச் செல்லவிருந்த அபிராமி – மீனாட்சி சுந்தரம் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை அடுத்த குன்றத்தூரில் திருமணத்தை மீறிய உறவுக்காக, இரு குழந்தைகள் கொலை செய்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், முன்னதாக தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்போது தண்டனை விவரங்களை வெளியிட்டுள்ளது.