லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் அரசு பங்களாக்களை முன்னாள் முதல்வர்கள் காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி, ராஜ்நாத் சிங், நாராயண் தத் திவாரி, கல்யாண் சிங் ஆகிய 6 பேரும் பங்களாக்களை காலி செய்ய 15 நாட்கள் கெடு விதித்து அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கான கெடு நெருங்கியதை தொடர்ந்து 5 பேர் தங்களது அரசு பங்களாக்களை இன்று காலை காலி செய்தனர். விவிஐபி அரசு விருந்தினர் விடுதியில் அகிலேஷ் யாதவ் குடும்பத்தோடு தற்காலிகமாக தங்கியுள்ளனர். மாயாவதி ஒரு வீட்டை மட்டுமே ஒப்படைத்துள்ளார். மற்றொரு வீட்டை அவரது கட்சியின் நிறுவனர் கன்சிராம் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திவாரி மட்டும் முதுமை காரணமாக வேறு வீடு ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்து காத்திருக்கிறார்.