பாடகி “வைக்கம்” விஜயலட்சுமி
பகுதி- 2

திருமணத்தில் இருந்து விலகுகிறேன்னு சொன்னபோது அவரோட எதிர்வினை எப்படி இருந்தது?

முதலில் கோபம், போனில் மிரட்டல் தொடந்தது. ஆனா நான் வேண்டாம்னு சொன்னதுக்கப்புறம்  அவரால ஒண்ணுமே சொல்ல முடியலை.  நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னதைத் தொடர்ந்து அவரோட மாமா இங்கே வந்தார். அவரு வந்தது பேசி சமாதானப்படுத்துறதுக்காக.

ஆனால் எனக்கு இந்த கல்யாணம் வேணும்னு தோணலை. வந்தவங்ககிட்டே அவர் எங்கிட்டே பேசினது எல்லாத்தையும் சொன்னேன். அதற்கு அவங்களுக்கு ஒரு பதிலும் சொல்ல முடியலை.

உங்களோட வாழ்க்கைத்துணை குறித்த எதிர்பார்ப்பு என்ன?

எல்லாவிதத்தில் என் கூடவே நிற்பவராக இருக்கணும். எனக்கு நம்பிக்கையூட்டுபவராக இருக்க ணும். சங்கீதம் தெரிந்தவராக இருந்தால்தான் என்னை அவரால் புரிந்துகொள்ள முடியும்.  எனக்கு காட்சி கிடைப்பதற்குரிய மருந்து ஒண்ணுமே இல்லைன்னு அவர் சொன்னபோது,

நான் அவரிடம் கேட்டேன்,”ஏதாவது டாக்டர் ஒரு நோயாளியிடம் நீ சாகப்போறேன்னு எப்பவாவது சொல்வாரா? நீங்க சொல்லது அதுபோல இருக்குன்னு சொன்னேன்.

நிறைய பிரண்ட்ஸ்ங்க இருக்காங்களா?

சிலர் மட்டும்தான். நான் அவர்கிட்டே இப்படி சொன்னதைக்கேட்ட பிரண்ட்ஸ்ங்க சொன்னாங்க.. சூப்பர் .. இப்படித்தான் பதிலளிக்கணும்னு.. .பலரும் என்னைக்க கூப்பிட்டுப் பாராட்டினாங்க..” இப்படித்தான் தைரியமா தீர்மானம் எடுக்கணும்”னு.

கல்யாணம் பண்ணிட்டு விட்டுக் கொடுத்து, சகித்துக்கொண்டே வாழ்ந்து பல வருடங் களுக்குப்பின்  பல்வேறு வலிகளுடன் அதிலிருந்து பிரிந்து வருவார்கள்..? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

அதுதான் அதுதான். அதற்கு ஏதாவது தேவை உண்டா? நான் என்ன சொல்ல வர்றேன்னா அப்படி பயந்து வாழ வேண்டிய அவசியம் இல்லைங்கிறேன்.  நான் நிச்சயத்துக்கு முன்னரே தீர்மானித்திருந்தேன்.. கல்யாணம் பண்ணிகிட்டாலும் அடிமையா வாழக்கூடாதுன்னு.

என்னுடைய நியாயமான விருப்பங்களுக்கு எதிராக யார் இருந்தாலும் நான் சகித்துக்கொண்டு இருக்கமாட்டேன். எதிர்ப்பேன். இது என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்லாவே தெரியும்.

இப்படி தைரியமாக எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு எப்படி யாரால் கிடைத்தது?

சங்கீதம்தான் என்னோட சக்தி. சங்கீதம்தான் என்னை இப்படி ஒரு முடிவு எடுப்பதற்காக தூண்டியதும்.  அந்த நேரத்தில் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது. பாடுவதற்கு முடியவில்லை. காரணம் மனசு சரியில்லாமல் இருந்தது.

கடவுளே மனசுக்கு நிம்மதி தான்னு பிரார்த்திச்சுகிட்டிருந்தேன். இப்போதான் நிம்மதியா இருக்கேன். கயிற்றில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியின் கயிற்றை அவிழ்த்து விட்டால் எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அதுபோல் சந்தோஷமா இருக்கேன்.

பொதுவாக எல்லாவற்றையும் பாசிட்டிவ்வாக பார்க்குற ஆள் விஜயலட்சுமி…  அப்படித்தானே..?

அப்படியும் சொல்லலாம். வாழ்க்கையை நான் பாசிட்டிவ்வா தான் பார்க்குறேன்.  “நீ பிரமாத மானவள்”னு என்னை  நான் எப்போதுமே சொல்லிக்கிட்டே இருப்பேன். அதேவேளை நான் தைரியமானவளும்கூட…அதனால் அல்லவா நான் இப்போ என்னை நானே காப்பாற்றி யிருக்கிறேன்.

ஹா.ஹா..

மேடையில் ஏறினீங்கன்னா உங்களோட ஃபெர்மார்மன்ஸ் பார்த்துகிட்டே இருக்கலாம் போலருக்கும். மிமிக்ரியும் பண்றீங்களே…?

நான் மேடையில் ஏறினால் பார்வையாளர்கள் கண்கள் என்னைப்பார்த்து இருக்கும் என்பது நன்கு தெரியும்…அவர்களை இசையால் வசியப்படுத்தவேண்டுமே…ஆகவே முடிந்தவரை என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன். அதுபோல் மிமிக்ரியும்.

பலகுரலில் நான் மேடையில் பேசுவதையும் அவர் விரும்பவில்லை. மிமிக்ரி பண்ணக்கூடா துன்னு சொன்னாரு. முடியாது. நான் மேடையில் மிமிக்ரி பண்ணுவேன்னு சொன்னேன்.  நான் விரும்பு செய்யுற வேலையில் குற்றம் சொன்னா அதற்கு எதிர்ப்பு காட்டுறதுதான் என்னோட குணம்.

இப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவிச்சா நான் பேசாம இருக்க மாட்டேன். அதெப்படி இதை எல்லாம் ஒத்துக்க முடியும்?

ஆண்கள் எல்லோரும் பிரச்சனைக்குரியவர்கள்னு நினைக்கிறீர்களா?

பெரும்பாலும் எல்லா ஆண்கம் பிரச்சனைக்குரியவங்கன்னு நினைக்கிறேன். நல்லவர்களும் இருக்கிறார்கள்.

அதெப்படி.. ஒரு நபரைப் பார்க்காமலேயே அந்த ஆளின் குணம் உங்களுக்கு தெரிய வருகிறது?

பழகும் விதம், அப்புறம் பேசும் முறை.  ஒருத்தர்கிட்டே பேசிகிட்டிருக்கும்போது அவரது குரலின் ஏற்ற இறக்கத்தை வைத்தே அவரது குணத்தை என்னால் அதை கண்டு பிடிக்க முடியும்.

சங்கீத உலகிலும் இப்படிப்பட்ட ஆண்கள் இருக்கிறார்களா?

கடவுள் புண்ணியத்துல அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லை. தாசேட்டன் (பாடகர் ஏசுதாஸ்) வரை நான் மிமிக்ரி பண்றதைக்கேட்டு ரசிப்பார். அப்புறம் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் உட்பட பலரும் என்னோட மிமிக்ரியை ரசிப்பாங்க. என்னோட மாமா ஸ்ரீகாந்தன் மிமிக்ரி கலைஞர். அவர்கிட்டேருந்துதான் மிமிக்ரி கலையைக்கத்துகிட்டேன்.

இப்போ கேரளாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடும் விவாதங்கள் நடக்கிறது தெரியுமா, விஜயலட்சுமிக்கு..?

ம்..நீங்க சொல்ற விஷயம் என்னோட காதுக்கும் வந்துச்சு. நான் சங்கீதத்தைத்தான் உயிர் மூச்சா கொண்டு வாழ்ந்துகிட்டு வருகிறேன். கேரளாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்றதைக்கேட்கும்போதே வேதனையாக இருக்கிறது. என்ன மாதிரியான நாடு இது? இங்கே பெண்களுக்கு சாமர்த்தியம் போதாது என்றே தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் பயப்படுகிறார்கள்.  அதனாலதான் நான் தப்பித்தேன்.

(தொடரும்)

   – க்ருஷ்ணவேணி தினேஷ்