சட்னா
பாஜக அரசு 10 கோடி போலி பயனாளிகளை நீக்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இன்று சட்னாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
அவர் தனது உரையில்,
”எனது அரசு ஏழை மக்களுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளைக் கட்டியுள்ளது. என்றாலும் எனக்காக ஒரு வீடுகூட கட்டவில்லை. உங்கள் வாக்கு, மீண்டும் பாஜக மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உதவும். உங்கள் வாக்கு டெல்லியில் மோடியை வலுப்படுத்துவதுடன், மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஊழல் காங்கிரசைப் பல மைல் தூரத்திற்கு விரட்டவும் உதவும். இதற்குப் பொருள் என்னவெனில், இது ஒரே வாக்கில் மூன்று அதிசயங்கள்.ஆகும்.
காங்கிரஸ் கட்சியால் அரசுத் திட்டத்தின் மூலம் பயனடையச் சேர்க்கப்பட்ட 10 கோடி போலி பயனாளிகள், நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு 2.75 லட்சம் கோடி ரூபாயைச் சேமித்துள்ளது. காங்கிரசார் அரசின் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது என்னை வசைபாடுகிறார்கள்.”
என்று கூறி உள்ளார்.