அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நேற்று அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
ராமாயணத்தில் அனுமர் கொண்டு வந்ததாக கூறப்படும் சஞ்சீவினி மூலிகையை இமயமலையிலிருந்து கண்டுபிடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
பிரதமர் மோடி, வி.எச்.பி தலைவர் பிரவீன் தொகாடியாவை பழிவாங்குவதற்காக வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்திய வழக்கில் லஷ்கர் தீவிரவாதி அபு ஜிண்டால் உட்பட 12 பேர் குற்றவாளிகள் என மகாராஷ்டிரா குற்றத் தடுப்பு சட்ட நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
காரைக்குடியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு வேலைக்குச் சென்ற பொறியாளர், கடத்தப்பட்டுள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவில் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்
சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் பயணிகள் ரயில் ஆத்தூருக்கு நேற்று இரவு 7.50க்கு வந்தது. அது மங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்காக முதல் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 2வது பிளாட்பாரத்திற்கு பதில் முதல் பிளாட்பார பாதையில் வந்தது. இதனால் பயணிகள் அலறினர். ஆனால் 100 அடி தொலைவில் மங்களூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. மழையினால் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக அந்த ரயிலை முதல் பிளாட்பாரத்திற்கு மெதுவாக கொண்டு வந்தோம் என அதிகாரிகள் தெரிவித் தனர்
சென்னையில் டாலர், யூரோ தருவதாகக் கூறி ரூ.2.6 கோடியை மோசடி செய்தது தொடர்பான வழக்கில், தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியான ஏழாவது நாளில் ரூ 389 கோடியைத் தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் வங்கதேசத்துக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
ஹிந்துக்களின் மத நம்பிக்கைக்குரிய பசுக்களை பாதுகாப்பதன் மூலம் முஸ்லிம்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் நிர்வாகி ஜைனூல் அபேதின் அலி கான் வலியுறுத்தியுள்ளார்.
லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்காக பணியாற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஹதூர் அலி (22) என்கிற சையிஃபுல்லாவிடம் தேசியப் புலனாய்வு அமைப்பினர் நேற்று விசாரணை நடத்தினர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வில் 634 மாணவர்கள் முறைகேடு செய்தனர் என்று இரு நபர் அமர்வு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தண்டனை விவரம் மாறுபட்டதாக இருப்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்கலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
லக்னோவில் 15 ரூபாய் கடன் பாக்கியை தராததால் கூலித் தொழில் செய்யும் தலித் தம்பதியினரை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசியைக் குறைப்பதாக மக்களவைத் தேர்தலின்போது தாம் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றத் தவறிவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெற உள்ள “சார்க்’ மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவிருக்கிறார். அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வரும் விவகாரத்தை எழுப்ப அவர் திட்டமிட்டுள்ளார்.
பாஜக கூட்டணி ஆட்சியில் பணவீக்கம் குறைந்துள்ளது என்றும், பருவமழை நன்கு பொழிய வாய்ப்பிருப்பதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை மேலும் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு, 12 அடியாக உயர்த்தி கட்டிய தடுப்பணையில், சுமார் 6 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், தமிழகத்துக்கு நீர் வராததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலாற்றின் மற்றொரு துணை ஆறான ஜிங்க் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?-ராமதாஸ்
சென்னை அருகே காணாமல்போன ஏ.என். 32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்காததால் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என விமானப்படை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகத்தின் குளச்சல் துறைமுகம் மத்திய அரசின் நிதியுடனும், தனியார் பங்களிப்புடனும் செயல்படுத்தப்பட உள்ளது என மத்தி இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தேக்கம் அடைந்துள்ள சாலை பணிகள், ரத்து செய்யப்படுவது குறித்து அடுத்த பார்லி., கூட்டுத் தொடருக்கு முன் முடிவு செய்யப்படும்–மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடும் எதிர்ப்பினையும் மீறி இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் உள்பட 14 பேருக்கு ஒரே நேரத்தில் கொடூர மரணதண்டனை வழங்கப்பட்டது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை விடியோ எடுக்க, போலீஸாருக்கு அனுமதி அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கத்தாரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.