டில்லி

ந்தியாவில் உள்ள மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.   இதில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  தமிழகம் இரண்டாம் இடத்திலும் டில்லி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.  தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது.

முன்பு கொரோனா ஹாட் ஸ்பாட்டுகளாக இருந்த டில்லி, மும்பை, சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களில்கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆயினும் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் அதிகமானோர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளன்ர்.  இதில் 200 இடங்களில் 1000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   சுமார் 80% மாவட்டங்களில் ஒரு  கொரோனா மரணம் ஆவது  நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே ஹாட்ஸ்பாட்டாக இருந்த பல இடங்களில் சுகாதார உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டதால் பாதிப்பு குறைந்து வருகிறது.  அதே வேளையில் பெரும்பாலான மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்டுகளாக மாறி வருகின்றன.  இந்த இடங்களில் தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா பாதிபு அதிகரித்து வருகிறது.  குறிப்பாக 11 மாவட்டங்களில் அதிகரிப்பு அதிக அளவில் உள்ளன.