தராபாத்

மெட்ரோ ரெயில் சேவை துவங்கிய முதல் நாளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

ஐதராபாத் மெட்ரோ பொதுமக்களின் உபயோகத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.   முதல் நாளில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பயணம் செய்துள்ளனர்.  அனைவருக்கும் இது ஒரு புதிய அனுபவம் என்பதால் ரெயில்களில் கடும் நெரிசல் காணப்பட்டது.   சிறியோர், பெரியோர் என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் செல்ஃபி எடுத்தபடி பயணத்தை மிகவும் அனுபவித்துள்ளனர்.

ஐதராபாத் மெட்ரோ ரெயிலின் நிர்வாக இயக்குனர் ரெட்டி மக்களுடன் பயணம் செய்து பொதுமக்களின் கருத்த்துக்களை கேட்டறிந்தார். இது குறித்து அமைச்சர் கே டி ராமாராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஐதராபாத் மக்களிடையே மெட்ரோ ரெயில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  முதல் நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்” என முதலில் பதிந்திருந்தார்.   பிறகு அவர் அதே பதிவில் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என பின்னூட்டம் அளித்துள்ளார்.