மதுரை:

மிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேர்தலை சுமூகமாக நடத்த மேலும், 3700 காவல்துறையினர் வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் அறிவிப்புக்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  அன்றைய தினம் சித்திரை திருவிழா மற்றும், பெரிய வியாழன், அடுத்த 19ந்தேதி சித்ரா பவுர்ணமி வருவதால்ர, அன்றைய தினம்  தேர்தல் நடத்தக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தேர்தலை நடத்துவதில், தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், மதுரைக்கு  கூடுதலாக 3,700 காவல்துறையினர் வேண்டும்  என்று தமிழக டிஜிபி-க்கு, மதுரை ஆட்சியர் கடிதம் எழுதி உள்ளார்.

ஒரே நாளில் சித்திரை திருவிழா மற்றும் தேர்தல் நடைபெறுவதால், மதுரை மாவட்டத்தில் பாதுகாப்புக்காக இருக்கும்  12 ஆயிரம் காவலர்களை கொண்டு தேர்தல் நடத்துது இயலாத காரியம் என்றும், மேலும்  கூடுதலாக 3,700 காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டால், தேர்தல் மற்றும் சித்திரை திருவிழாவை சுமூகமாக நடத்தலாம் என்றும் கடிதத்தில் கூறி உள்ளார்.