பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள 2700க்கும் மேற்பட்ட பரிசுகள் வரும்14ஆம் தேதி ஏலம்

Must read

டில்லி

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள 2700க்கும் அதிகமான பரிசுகள் வரும் 14 ஆம் தேதி அன்று ஏலம் விடப்பட உள்ளன.

பிரதமர் மோடி தனக்கு அளிக்கப்படும் பரிசுகளை ஏலம் விட்டு அந்த நிதியை நலத் திட்டங்களுக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதம் அவ்வாறு சுமார் 1800 பரிசுப்பொருட்கள் 15 தினங்கள் தொடர்ந்து ஏலம் விடப்பட்டன.

அந்த பண மத்திய அரசின் கங்கை நதி சுத்திகரிப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்டது.

தற்போது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள 2772 நினைவுப் பரிசுப் ருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட உள்ளன.   இந்த ஏலம் வரும் 14 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இந்த தகவலை மத்திய கலாச்சார அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்துள்ளார்.

 

இந்த நினைவுப் பரிசுப் பொருட்களின் குறைந்த பட்ச டிப்பை விலை  ரூ.200 முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  அதைப் போல் அதிகபட்சமான அடிப்படை விலை ரூ.2.5 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article