மொரினா,

ண்ணீரின்றி இந்தியாவின் தேசிய பறவையான மயில் இனம் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின்  .இந்தியாவின் தேசிய பறவையான மயில் கொத்துக்கொத்தாக மரணமடைந்து கிடப்பது மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1963ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பறவை மயில் அறிவிக்கப்பட்டது. மயிலை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி வேட்டையாடுவோர் கைது செய்யப்படுவதும் வழக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் மிமொரெனா பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட மயில்கள் கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தன.

வனப்பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதாலும், தற்போத கடும் வெயிலின் காரணமாகவும்,  மழையின்றி வனப்பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் தண்ணீர் இல்லாததாலும் மயில்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மத்திய பிரதேசத்தில் உள்ள சுமாவலி வனப்பகுதியில் நேர்ந்துள்ளது.

தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மயில்கள் மரணத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.