டில்லி
கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

தற்போது இணையத்தின் மூலம் தகவல் அனுப்புவது மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது. இதில் அலுவலக தகவல்கள், நட்பு தகவல்கள், குறும்படங்கள்,வீடியோக்கள் புகைப்படங்கள் எனப் பல விதங்களில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. மேலும் தனிப்பட்ட முறையில் மற்றும் குழுக்கள் மூலம் அதிக அளவில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் ஏப்ரல் மாத நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “அலைப்பேசி மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், செயலியில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுக்க ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது
பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம், 122 கணக்குகளை தடை செய்தது. அத்துடன் வாட்ஸ் அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுக்க 16.66 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. குற்றம் நடைபெறுவதைத் தடுப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது என்று நம்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் இதனால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
[youtube-feed feed=1]