சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ‘தமிழ்நாடு காமன் அட்மிஷன் (டான்கா)’ முதுநிலை பொறியியல் படிப்புகான கலந்தாய்வைத் தொடர்ந்து, 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காலியாக உள்ளதாக அறிக்கப்பட்டு உள்ளது.
பொறியியல் படிப்பு தொடர்பான மோகம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், முதுநிலை பொறியியல் படிப்பு மீது மாணவ மாணவிகளிடையே எதிர்பார்ப்பு குறைந்து வருகிறது.
இந்த நிலையில், எம்.இ, எம்டெக், எம்.ஆர்ச் மற்றும் எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பிற அரசு சார்ந்த நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கான டான்கா கவுன்சிலிங் ஆகஸ்ட் 27 முதல் 29 வரை நடைபெற்றது.
இந்த கவுன்சிலிங் முடிவடைந்த நிலையில், 12,000 க்கும் மேற்பட்ட பிஜி பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.
இந்த கவுன்சிலிங்கிற்கு 6268 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 5083 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், 2773 பேர் மட்டுமே தங்களுக்கு பிடித்தமான இடங்களை தேர்வு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து எஸ்சி (ஏ) பிரிவின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் இன்று மீண்டும் நடைபெறுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.