இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு அடைந்துள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33லட்சத்து24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்படைந்தோர் மொத்த எண்ணிக்கை 332424 பேர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 325 பேர் மரணம் அடைந்ததையடுத்து, மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 9520 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 7419 நோயில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இதுவரை 169798 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 153106 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 107958 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 44661 பேருக்கும், டெல்லியில் 41182 பேருக்கும், குஜராத்தில் 23544 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.