கொரோனா சமூக பரவலாகி விட்டது; அரசு அலட்சியமா இருக்கு… 5கேள்விகளை எழுப்பி அதிர வைத்த ஸ்டாலின்…

Must read

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா சமூக பரவலாகி விட்டது; அதற்கான ஆதாரம் உள்ளதாகவும், ஆனால்,  அரசு அலட்சியமா இருப்பதாகவும், முதல்வர் பொறுப்பின்மையா இருக்காரு என்று கடுமையாக விமர்சித்தவர் 5 முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளார்.

திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார்.

முதலில் ஊடவியலாளர்களையும், செய்தியாளர்களையும் எச்சரிக்கையாகசெயல்பட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் தொடர்ந்து பேசியவர்,. கொரோனா பரவல் தமிழகத்தில்  கட்டுக்கடங்காமல் இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அன்கழனையும் நாங்கள் இழநதுள்ளோம்.  இந்த நோயால் பேராபத்து சூழல் நிலவி வருகிறது.  இதனால், கொரோனா தடுப்பு குறித்து, ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்கிறது இன்றைய முக்கியமான கடமையாக நான் கருதுகிறேன் என்றார்.

கடந்த ரெண்டு மாசமா  கொரோனாவால்  தமிழகம் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.  பிற மாநிலங்களில் எல்லாம் லாக்டவுன்  அறிவிக்கப்பட்டு நிலைமை சீராகி வருகிறது. தமிழகத்தின் நிலைமை மோசமாகி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுவதில்  சரியான முடிவு எடுக்காமல் தமிழக அரசு திணறி வருகிறது.

இந்த அரசை  நீக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், கொரோனா பலி விவகாரத்தில், அரசின்  போக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.  இந்தியாவில் கொரோனாவால்  ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகிறது சில புள்ளி விவரங்கள் மூலமாக உங்களுக்கு நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று கொரோனா விவகாரத்தில் அரசின் அலட்சியப்போக்கை கடுமையாக விமர்சித்தார்.

நாட்டிலேயே கொரோனா பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போது தமிழகத்தில் மட்டும் அதிகரித்தது. அரசின் அலட்சியத்தாலும், முதலமைச்சரின் பொறுப்பின்மையாலும் கொரோனா அதிகரித்து வருகின்றது.

இந்தியாவிலுள்ள நகரங்களிலேயே சென்னையில்தான் சராசரியாக தினமும் ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது. கொரோனவால் இரண்டு மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது.

முதற்கட்ட ஊரடங்கில் கொரோனா பாதிப்பு குறைந்த அளவில் இருந்தது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.   தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு தன்னிடம்  ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூறவில்லை. கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது.

அரசு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி போட்டியை தடுக்க வேண்டும். அமைச்சர்கள் இடையிலான குழு சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.
கொரோனாவை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் முதலமைச்சர் உள்ளார்.

கொரோனா பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை மறைப்பது ஆபத்தானவை. கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது .

1. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?

2. தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்றால் ஏன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

3. ஊரடங்கின் போது குழுவுக்கு மேல் குழு என அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் எங்கே?.

4. எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமாக ஆலோசிக்க அரசு ஏன் தயங்குகிறது?

5. பொருளாதார மீட்பு, வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய எப்போது அரசு ஆர்வம் காட்டும்?

என்னுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article