கியூபா:

கியூபா நாட்டில் ஜெட்லைலன் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்ட்டி இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 பயணிகள் ஜெட் விமானம், விமான நிலையத்தில் இருந்து விமானம் மேலெழுந்த சிறிது நேரத்தில்  இந்த விபத்து ஏற்பட்டதாககூறப்படுகிறது.

விபத்து காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில பயணம் செய்தவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், காவல்துறையினரும் உடடினயாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் அந்த பகுயில் உளள ஹவானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானத்தில்  105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் பெயர்களையோ, அவர்கள் எந்த நாட்டினர் என்ற விவரங்கள்   இன்னும் வெளியிடவில்லை.

விபத்து நடந்த இடத்தில் தீயை அணைத்தபின் அதிகாரிகள் உடல்களை அடையாளம் காண முயன்றனர், கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி,  பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலை தெரிவித்ததோடு, விபத்துக்கு குறித்து விசாரணை செய்ய  சிறப்பு ஆணையதையும் நியமித்து உள்ளார்.

விபத்துக்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

 

[youtube-feed feed=1]