ஜப்பானில் 25 விநாடிகள் முன்கூட்டியே புறப்பட்டு சென்ற ரெயில்…..நிர்வாகம் வருத்தம்

டோக்கியோ:

ஜப்பானில் குறிப்பிட்ட நேரத்திற்கு பதிலாக 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஜப்பான் நோட்டகவா ரெயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 7.12 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயில் நேற்று முன்தினம் காலை 7.12 மணிக்கு பதிலாக 25 வினாடிகள் முன்னதாக புறப்பட்டு சென்றுவிட்டது.

இதனால் ரெயிலை பிடிக்க முடியாமல் பயணிகள் பலர் ஏமாற்றமடைந்தனர். ரெயில்வே நிர்வாகத்தின் மீது கோபமடைநத்னர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.
English Summary
Japan railway management regret for 25 seconds advance departure of a train