4
வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அனவரும் ஓட்டளிக்க வேண்டும்.. அதாவது 100 சத ஓட்டுப்பதிவு ஆக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.
ஆனால் அதற்கான நடவடிக்கையில் தேர்தல் கமிசனே இறங்கவில்லை என்ற குமுறள் காவல்துறை வட்டாரத்தில் கேட்கிறது.
விசயம் இதுதான்:
தமிழ் நாடு சிறப்பு இளைஞர் காவல் படையிலிருந்து இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான சுமார் 9000 காவலர்கள் தற்போது சென்னை, மதுரை, நெல்லை வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 28 இடங்களில் காவலர் பயிற்சி பெற்று வருகின்றார்கள். வரும் சட்ட சபை பொதுத் தேர்தலில் இவர்கள்  வாக்களிக்க தேர்தல் ஆணையமோ அல்லது தமிழக காவல் துறையோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்.
மேலும் உதவி ஆய்வாளர் பயிற்சியில் உள்ள சுமார் 1100 பேர் வாக்களிக்கவும் எந்தவித முன்னேற்பாடும் இல்லை.
“நூறு சத ஓட்டுப்பதிவு என்று செலவு செய்து பிரச்சாரம் செய்யும் தேர்தல் ஆணையம், முதலில் இந்த காவலர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யட்டும்” என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?