டில்லி
இந்தியாவில் தற்போது விற்பனையாகும் மருந்துகளில் 10.5% போலியானவை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஓர்ல்ட்ஸ் ஹெல்த் ஆர்கானிசேஷன் எனப்படும் உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அனைத்து நாடுகளிலும் விற்பனையாகும் மருந்துகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து நாடுகளிலும் விற்பனை செய்யும் மருந்துகள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது
அந்த அறிக்கையில், “ இந்தியா போல பல நாடுகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் உள்ளனர். இந்நாடுகளில் விற்கப்படும் மருந்துகளில் 10.5% மருந்துகள் போலியானவை ஆகும். இந்த மருந்துகளை உட்கொள்ளும் மக்களின் நோய்கள் முறையாக குணமாவதில்லை. இதனால் பல நோய்களால் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மரணம் அடகின்றனர். அதிலும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இது வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் உள்ளது. அங்கு விற்பனையாகும் மருந்துகள் தரமானவை என சொல்லப்பட்டாலும் அந்த மருந்துகளும் முழுமையாக எந்த நோய்களையும் குணப்படுத்துவதில்லை. இந்த தரக்குறைவான மருந்துகள் புற்று நோய், கருத்தடை, நுண்ணுயிர் எதிர்ப்பு. தடுப்பூசிகள் போன்ற பல இனங்களிலும் பரவி உள்ளது” என குறிப்பிடப் பட்டுள்ளது