சென்னை

மிழக அரசு பேருந்துகளில் அதிக அளவில் பெண்கள் பயணம் செய்வதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தது.  அதைப் போல் திமுக ஆட்சி அமைத்ததும் முதல்வர் மு க ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க உத்தரவு இடப்பட்டது.  அந்த உத்தரவின்படி கடந்த மே மாதம் 8 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.  அதன் பிறகு திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள் ஆகியோர் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதல்வர் உத்தரவிட்டார்.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ”கடந்த 12 ஆம் தேதி முதல் அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர்.   தமிழக அரசு பேருந்துகளில் மொத்த பயணிகளில் 56% பேர் பெண்கள் ஆவார்கள்.    திருநெல்வேலியில் மட்டும் 68% பேர் பெண்கள் ஆவார்கள். சென்னையில் நேற்று ஒரே தினத்தில் 28 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.