அமெரிக்காவில் துப்பாக்கியால் சுடப்பட்ட தெலங்கானா மாணவர் கவலைக்கிடம்

ஐதராபாத்:

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தெலங்கானா மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் முபீன் அஹமத் (வயது 26). இவர், கடந்த 2015ம் ஆண்டு முதல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அங்கு கடை ஒன்றில் பகுதி நேரமாக வேலைபார்த்து வந்தார்.

கடந்த 4ம் தேதி மாலை 6 மணிக்கு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் இதில் முபீன், படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அஹமத் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அஹமத் தந்தை முஜிப் கூறுகையில், ‘‘ மருத்துவமனை நிர்வாகம் என்னை செல்போன் மூலம் அழைத்து தகவல் தெரிவித்தது. அங்கு, முபீன் தீவிர சிகிச்சை பிரிவில் சுய நினைவின்றி உள்ளார்.

எனது மகனை பார்க்க விசா தேவைப்படுகிறது. இது குறித்து தெலுங்கானா அமைச்சர் ஹரீஸ் ராவை சந்தித்துள்ளேன். அவர் உதவுவதாக தெரிவித்துள்ளார்’’ என்றார்.


English Summary
Indian student from Telangana in critical condition after being shot in a California store: