பிரிட்டன் தேர்தல் தொடங்கியது

ண்டன்

ங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்துக்கான தேர்தல் தொடங்கி விட்டது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாண்ட் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய அனைத்து இடங்களுக்குமான வாக்களிப்பு இன்று காலை இங்கிலாந்து நேரப்படி காலை 7 மணிக்கு துவங்கியது

மாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10) முடிவுறும் இந்த தேர்தலின் முடிவுகள் வாக்களிப்பு முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பின் வரத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 3300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

பிரதமராகப் போவது கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் தெரிசாவா அல்லது லேபர் கட்சியின் ஜெரிமியா என்பது நாளைக்குள் தெரிந்து விடும்

 


English Summary
uk polling started