லண்டன்,

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தொடக்கத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்து வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவடைய உள்ள நிலையில், தற்போது கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததையடுத்து,   வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய பிரதமர் தெரசா மேக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் கூறுகிற்ன..

பிரிட்டன் பார்லிமென்ட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.  பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது.  இங்கு கடந்தா 2015ம் ஆண்டு  மே மாதம் தேர்தல் நடந்தது. பிரதமராக தெரசா மே தேர்வானார். அவரது பதவி காலம் 2020 வரை உள்ளது.

ஆனால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பின்போது, அவருக்கு  பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை. இதன் காரணமாக தேர்தலை முன்கூட்டிய நடத்த உத்தரவிட்டார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தொடக்கத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்து வந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிவடைய உள்ள நிலையில், தற்போது கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இதுவரை சுமார் 600 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கன்சர்வேட்டிவ் கட்சி 289 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 247 இடங்களை பிடித்துள்ளது. இதில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

மெஜாரிட்டி பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்

600 தொகுதிகளின் வெற்றி நிலவரம்:-

கன்சர்வேட்டிவ் கட்சி – 289

தொழிலாளர் கட்சி  – 247

ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி – 34

லிபரல் ஜனநாயக கட்சி – 10

ஜனநாயக ஒற்றுமைவாத கட்சி – 10

மற்றவை – 11