ரோசெஸ்டர், நியூயார்க்

மெரிக்காவில், குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற பெண் நீதிபதி ஒருவருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அவர் கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்காவில் ரோசெஸ்டர் நகர நீதிமன்றத்தின் பெண் நீதிபதி லெடிசியா அஸ்டாசியோ.

இவர் கடந்த 2016, ஃபிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று, காலை 8 மணி அளவில் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

அதே சாலையில் ஒரு கார் விபத்து நடந்துள்ளததால் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையில் தன் காரை சோதனை செய்யக்கூடாது எனவும்,  குடித்திருக்கிறாரா என்னும் பரிசோதனைக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார் அஸ்டாசியோ.

ஆனால் அவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது தெளிவாகத் தெரிந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையில் தான் மது அருந்தியதாகவும், போதையில் வாகனம் ஓட்டியதாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் விசாரணையில், அவர் குடிபோதையில் அவர் இருமுறை அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அவர் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறியதும் தெரிந்தது.

அவருடைய வாகனத்தில் பாதுகாப்பு கருவி பொருத்தப் பட்டிருந்தது.

அந்த கருவி அளவுக்கு மிஞ்சிய போதையில் காரை தாறுமாறாக ஓட்டினால், வாகனத்தின் ஓட்டத்தை நிறுத்திவிடும்.

இது போன்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுவிடும்.

இவை அனைத்தையும் ஆராய்ந்த நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனையும், அதற்குப்பின் அவர் ஆறுமாதங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

இதை ஒப்புக்கொள்ளாத அஸ்டாசியோ, மேல் முறையீடு செய்தார்.

ஆனால் அவர் இந்த வழக்கில் அழைத்த போது வருவதையே நிறுத்திக் கொண்டார்.

கடைசி எச்சரிக்கையாக கடந்த செவ்வாய் அன்று நேரில் வரவேண்டும் என்னும் நீதிமன்ற எச்சரிக்கையையும் அவர் பொருட்படுத்தவில்லை.

அன்று தாய்லாந்திலுள்ள திபெத்திய கோயில் ஒன்றில் துறவிகளைக் காண சென்றுவிட்டதாக தன் வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அஸ்டாசியோ கைது செய்து,நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.

சிறிதும் கலக்கமின்றி,  தன்னை சந்திக்க வந்திருந்த செய்தியாளர்களிடம் சிரித்து பேசியுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அஸ்டாசியோ செய்வது எதுவும், அவர் வசிக்கும் பதவிக்கு மதிப்போ, நம்பிக்கையோ அளிக்கும் வகையில் இல்லை என வருத்தம் தெரிவித்தார்.

பின் நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க இட்ட உத்தரவுக்கிணங்க கைவிலங்குடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

அஸ்டாசியோவுக்கு ஜாமீனில் வர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், வரும் வியாழன் வரை அவரை சிறையில் அடைத்து வைக்கப்படுவார்.