சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில்  PG (முதுநிலை) படிப்புக்கான இடங்கள் அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு அரசாரணை மூலம் உறுதிப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 13 மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக பாடப்பிரிவு தொடங்க தமிழ்நாடு அரசு மத்திய அரசிடமும், மருத்துவ கவுன்சிலிடமும் அனுமதி கோரியிருந்தது. அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 13 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில், முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் 488 இடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இந்த கூடுதல் இடங்களில்,  அடுத்த கல்வியாண்டு முதல்  நடைமுறைக்கு வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.