சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், சென்னையில் உள்ள காவல்துறை தலைவர் அலுவலகமான டிஜிபி அலுவலகத்தில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 827 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 559 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 12,762 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றிய, ஒரு டி.எஸ்.பி., ஒரு காவல் ஆய்வாளர், ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 20 பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel