சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பும், பலியும் உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் இன்று மேலும் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக உள்ளது.  நேற்று ஒரே நாளில்  70 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,456  ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று மேலும் 18 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி,  அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும்,  ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்ப்ப்பாக்கம் மருத்துவமனை களில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.