சென்னை:
மிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஏற்கனவே 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ள நிலையில், தற்போது மேலும்  1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா  பரவல் தடுப்பு  நடவடிக்கையாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தேவையான சோதனைக்கருவிகளை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் உள்பட பல மாநிலங்கள் இறக்குமதி செய்து வருகின்றன.
ஏற்கனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா ரேபிட் கிட், சரியான முடிவுகளை தெரிவிக்காததால்,  அதை உபயோகப்படுத்த ஐசிஎம்ஆர் தடை விதித்தது. பிசிஆர் கருவிகள் மூலமே சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.
இதையடுத்து, தமிழக அரசு தென்கொரியாவில் இருந்து 10லட்சம்  பிசிஆர் பரிசோதனை கருவிகளை ஆர்டர் செய்தது. அதன்படி முதல்கட்டகமாக மே முதல் வாரத்தில் சுமார் 1 லட்சம் பிசிஆர் சோதனைக்கருவிகள் வந்ததாக தமிழக   சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது  மேலும், 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் நாள் தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிய  RT-PCR கருவிகள் மூலம் சோதனையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.