கோவை: தமிழ்நாட்டில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், கோவையில் உள்ள 6 வார்டுகளில் மட்டும் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல்வராக ஸ்டாலின் பதவ ஏற்றதும், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். மேலும் தமிழகம் முழுவதும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி, அவர் கொடுத்த வாக்குறுதிபடி, விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மின்சாரத் துறையில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.