சென்னை:

மாதம் ரூ 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா? என 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மசோதா குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி யுள்ளார்.  மத்திய அரசின் கூற்றின்படி,  எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என  விமர்சித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக நலித்த பொதுப்பிரிவினருக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தும் நடைமுறைக்கு வரும்.

இந்த நிலையில் இடஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது

மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு!

பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம் !

என்று விமர்சித்துள்ளார்.

மாதம் 60,000 ரூபாய் சம்பளம் வாங்குபவரும் ஏழை, 6,000 ரூபாய் சம்பளம் வாங்குபவரும் ஏழை. இது எப்படி இருக்கு என கேள்வி எழுப்பியுள்ள அவர், பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி பேர் ஏழைகளாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.