சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்  அதிதீவிர ‘மொந்தா’ புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,  வரும் 27ஆம் தேதி ‘மொந்தா’  புயலாக மாறி ஆந்திரத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியிருந்தது. தற்போது இந்த புயல் அதிதீவிர புயலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை சென்னை உள்பட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  மேலும் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.

வங்கக் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நேற்று மாலையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னம் உருவாகும் என்பதை உறுதி செய்திருக்கிறது. தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி வங்கக் கடலில் உருவாகும் முதல் புயலானது ஆந்திரத்தை நோக்கி  அங்கு கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயலுக்கு  மொந்தா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. புயலுக்கான இந்தய தாய்லாந்து நாடு  வழங்கி உள்ளது.

தவங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது,  சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு- தென் கிழக்கில் நிலை  கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வரும்  27ஆம் தேதி புயலாக வலுப்பெறுவழடன்,  அக். 28ஆம் தேதி அதி தீவிர புயலாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த  மொந்தா,  தீவிரப் புயலாக வலுவடைந்து ஆந்திர கட்ற்கரையில் கரையைக் கடக்கவிருக்கிறது. அதவாது இந்த புயல், ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து, மச்சிலிப் பட்டனம் – விசாப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதன்  காரணமாக வரும் 27, 28ஆம் தேகிளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக,   9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,  இன்று  மாலை,  செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.