சென்னை; மொன்தா புயல்  இன்று மாலை ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில்,  வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன்  தெரிவித்துள்ளதுடன், தென்சென்னையில் தூறல் மலையுடன் அடுத்த 2மணி நேரத்திற்கு பிறகு மழை குறைந்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான  மொன்தா புயல், நேற்று  11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் வேகத்தில் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து  சென்னைக்கு கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும்,  ஆந்திர மாநிலம்  மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மொன்தா புயல் குறித்த இறுதி அறிவிப்பு என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவதுஆ,

மொன்தா இறுதி அறிவிப்பு –  இன்று வட சென்னையில் நிலையான மழையும், தென் சென்னையில் தூறல் 2 மணி நேரம் வரை தொடரும், பின்னர் மழை குறைந்து மெதுவாக நிற்கும்.

வட சென்னையில் 60-70 மி.மீ., எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் கடலுக்கு மிக அருகில் கனமழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 30-50 மி.மீ., பதிவாகியுள்ளது.

இது இயல்பானது,  “நான் எதிர்பார்த்தது போல” நான் கணித்தது போல தனது  மதிப்பீட்டிற்கும் மழையின் வடிவத்திற்கும் இது எவ்வளவு சரியானது என்பது தெரிய வந்துள்ளது. இது ஒரு கடுமையான புயல் ஆனால் இறுதியில் நாங்கள் அதைச் சரியாகச் செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,   சென்னைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மழை அல்லது இடைவேளை மழை பெய்யும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.