சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மழைக்காலங்களில் மின்வாரியம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் பகிர்வுப் பெட்டிகள் மற்றும் மின் இணைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதைத் தொடாமல் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் மின்கம்பங்களுக்கு அருகில் விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 15ந்தேதி முதல் மாநிலம் முழுவதும், மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. மேலும், தற்போது அரபிக்கடல் மற்றும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் வெளியே செல்லும்போது, சாலைகளில்  அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியிருப்பதாவது,

ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், மின்​சாதனங்​களை இயக்க முயற்​சிக்க வேண்​டாம்,

வீட்​டின் உள்​புறசுவர் ஈரமாக இருந்​தால் சுவிட்​சுகள் எதை​யும் இயக்​கக் கூடாது, ஈரப்​ப​த​மான சுவர்​களில் கை வைக்க கூடாது.

 நீரில் நனைந்த அல்​லது ஈரப்​ப​த​மான மின்​விசிறி, லைட் உட்பட எதை​யும் மின்​சா​ரம் வந்​தவுடன் இயக்க வேண்​டாம்,

மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் பகிர்வுப் பெட்டிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்.

அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடாதீர்கள்.

மின்சாரத்தால் ஆபத்து ஏற்படும் என சந்தேகிக்கப்படும் இடங்களை உடனடியாக மின்வாரியத்திற்குத் தெரிவிக்கவும்.

கனமழை மற்றும் புயலின் போது மின்சார உபகரணங்களை கவனமாகக் கையாளவும்.

வீட்டிற்குள், மின் சாதனங்களை மழை நீர் படும் வகையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகள் மின் கம்பங்களுக்கு அருகில் விளையாட அனுமதிக்காதீர்கள்.

மின்​கம்​பிகள் அறுந்து கிடக்​கும் பகு​தி​கள், மின்​சார கேபிள்​கள், மின்​சார கம்​பங்​கள், பில்​லர் பாக்ஸ் மற்​றும் டிரான்​ஸ்​பார்​மர்​கள் இருக்​கும் பகு​தி​களுக்கு அரு​கில் செல்​வது தவிர்க்க வேண்​டும்.

சாலைகளி​லும், தெருக்​களி​லும் மின்​கம்​பங்​கள் மற்​றும் மின்​சாதனங்​களுக்​கருகே தேங்​கிக்​கிடக்​கும் தண்​ணீரில் நடப்​பே​தா, ஓடு​வே​தா, விளை​யாடு​வதோ மற்​றும் வாக​னத்​தில் செல்​வேதா தவிர்க்​கப்பட வேண்​டும்.

மின்சேவை, மின்கம்பி அறுந்துவிழுதல், மின்​தடை குறித்த புகார்​களுக்கு உடனடி​யாக மின்​னகத்தை “94987 94987” தொடர்பு கொள்​ளு​மாறு பொது​மக்​கள் கேட்​டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு கூறியுள்ளது.