சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து   அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரத்தில் பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பருவமழை முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலும்,  குடிநீர், கழிவுநீர், மழைநீர் வடிகால் பணிகள் அக்டோபர் 15க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், மழைநீர் தேங்காமல் தடுக்க தேவைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை நடத்தி வருகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  மேலும், மழையால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்மூட்டைகள் பாதிக்கப்படாவது முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதுடன், மழைநீர் சாலைகளில் தேங்காதவாறும், வடிகால்கள் தூர் வாரப்பட்டது தொடர்பும் விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, டிஆர்பி ராஜா மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலுமை,  சாகுபடியில் சாதனை படைத்துள்ள இந்த ஆண்டில், நெல் கொள்முதல் – நெல் சேமிப்புக் கிடங்குகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி, உழவரின் உழைப்பில் விளைந்த நெல்மணிகள் உலைக்குச் செல்லும் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.