சென்னை :
காலை முதல் மாலை வரை அலுவலகம் வார கடைசியில் தீம் பார்க், பீச் ரிசார்ட், மால், பப் என்று வாரா வாரம் ஆரவாரம் என்று ஆர்ப்பரித்த மனித இனம்.

கொரோனா வைரஸால் கொட்டமடங்கி குத்த வைத்து உட்கார்ந்திருக்க, தனிமை காட்டுக்குள் இருந்த மனித இனத்தின் மூதாதையர் எல்லாம் தனிக்காட்டு ராஜாவாக மற்றொரு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் சுற்றி திரிகின்றன.
அப்படி ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து தனது விடுமுறையை மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கொண்டாடும் குரங்குகள் அங்குள்ள நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel