உத்திர பிரதேசத்தின் பிலிபிட் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியின் தோல்பட்டையில் அமர்ந்துகொண்டு குரங்கு பேன் பார்க்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

ட்விட்டரில் பிரியங்கி அகர்வால் என்ற பெண் ட்விட்டரில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் பிலிபிட் காவல் நிலையத்தில் காவல் அதிகாரி ஷ்ரீகாந்த் திவேதி ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் தோல்பட்டையில் அமர்ந்துகொண்டு குரங்கு பேன் பார்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது ட்விட்டரையும் தாண்டி ஃபேஸ்புக், இன்ஸ்டாவிலும் வைரலாகி வருகிறது.

டிவிட்டரின் பிரியங்கியின் வீடியோவைக் காணும் சிலர் குரங்கும் அதிகாரியும் எதையோ மும்மூரமாகத் தேடுகின்றனர் என்றும்.. சிலர் விலங்கு குணம் கொண்ட மனிதர்களை தினம் தினம் சந்திக்கும் அவர்களுக்கு இது புதிதாக இருக்காது என்றும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.