பண மோசடி வழக்கு: சுகேஷ்சந்திரசேகரின் காவல் நீட்டிப்பு!

கோவை,

ரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே கோவையில் பண மோசடியில் ஈடுபட்டிருந்தார்.

இதுகுறித்த வழக்கில் அவரது காவலை ஜூலை 27ந்தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவையைச் சேர்ந்த ராஜவேலு என்பவரிடம் 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம்  பெற்று மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் இருவரது காவலையும் ஜுலை 20-ந் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் அரசு பணி ஒப்பந்தத்தை வாங்கித் தருவதாக கூறி ரூ.2,43 லட்சம் மோசடி செய்ததாக சுகேஷ் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக  கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  சுகேஷ், கோவைக்கு கொண்டு வரப்பட்டார். இதற்காக டில்லி திகார் ஜெயிலில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் அழைத்து வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


English Summary
Money laundering case: Sukesh Chandrasekar extension of the police custody