பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள மலையாள சினிமா படம் –மரக்கார்-அரபிகடலிண்டே சிம்ஹம்.

முழுக்க முழுக்க கடல் பின்னணியில் உருவான இந்த படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும்.

கொரோனா சிதைத்த படங்களில் ஒன்று- மரக்கார்.

பல ரிலீஸ் தேதிகள் குறித்து , இப்போது மே மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் மரக்கார் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் சிறந்த படமாக இந்த படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் பிரிவிலும் ‘மரக்கார்’ படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

“இந்த படத்தை 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். இது தவிர சைனீஸ் மொழியில் வெளியிடவும் முடிவு செய்தோம். கொரோனா எல்லாவற்றையும் கெடுத்து விட்டது.

இதனால் சோகமாக இருந்தோம். இந்த நிலையில் தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார், மோகன்லால்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]