சர்ச்சை நடிகை கங்கனா ரணாவத் பூரிப்பாக இருக்கிறார். மார்ச் 23 ஆம் தேதி –அதாவது இன்று – அவரது பிறந்த நாள்.

பிறந்த நாள் பரிசாக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

கங்கனா, தேசிய விருது பெறுவது, இது நான்காம் முறை. மற்றொரு முக்கிய விஷயம் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடித்துள்ள ‘தலைவி’ படத்தின் டிரெய்லர், கங்கனாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகிறது.

முன்னதாக நேற்றே கங்கனா, தலைவி படத்தில் தான் நடித்துள்ள பல ஸ்டில்களை வெளியிட்டு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

“தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நான் 20 கிலோ எடையை அதிகரித்தேன். இப்போது பழைய நிலைக்கு வந்து விட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். எல்.விஜய் டைரக்டு செய்துள்ளார்.

– பா. பாரதி