மோகன்லால் – மீனா நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கிய மலையாளப் படமான ‘திரிஷ்யம்’ பெரும் வெற்றி பெற்றது.

தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமலஹாசன், இதன் ரீமேக்கில் நடித்தார்.

மோகன்லால்- மீனா- ஜீத்து ஜோசப் கூட்டணியில் ‘திரிஷ்யம்- 2’ உருவானது.

முதல் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இரண்டாம் பாகத்திலும் இடம் பெற்றனர்.

முன் கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை.

அமேசான் பிரைம் இணையத்தில் நேற்று ரிலீஸ் ஆனது.

இந்த படத்தின் ரிசல்ட் குறித்து மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் “‘திரிஷ்யம் -2’ படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. ஏராளமானோர் போனில் வாழ்த்து சொன்னார்கள். பலர் மெசேஜ் அனுப்பினர், அடுத்த படத்தில் இன்னும் தெம்பாக பணிபுரிய உங்கள் பாராட்டுகள் உதவும்” என குறிப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]