மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இன்று அவர் தனது 61வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்தமுறை தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சில நண்பர்களுடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாகவே சென்னையிலேயே மோகன்லால் தங்கி இருக்கிறார்.
இதன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.