
மீரட்
சமுதாய முன்னேற்றத்துக்கு ஒரே வழி அனைத்து மக்களும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இணவதுதான் என் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.
பாஜக வின் தாய் இயக்கம் எனக் கூறப்படும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத். இவர் தற்போதுஉத்திரப் பிரதேச மாநிலத்தில் 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் ஒரு பகுதியாக நேற்று மீரட் நகரில் தேச விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார். இந்த இயக்கம் தொடங்கி 93 வருடம் ஆவதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மோகன் பகவத், “சமுதாய முன்னேற்றம் என்பது தற்போது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். அதை கொடுக்க ஒரு அமைப்பால் மட்டும் முடியாது. எனவே இந்திய மக்கள் அனைவரும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இணய வேண்டும். அதுவே முன்னேற்றத்துக்கு ஒரே வழி. தன்னை பாரதத் தாயின் மகன் என உணர்பவர் அனைவரும் இந்தியர்களே. அதாவது அனைவரும் இந்துக்களே. நாம் கடவுளை வணங்கும் விதம் மாறுபட்டிருந்தாலும் அடிப்படையில் இந்துக்களே.
நாம் தேவை இல்லாமல் வணங்கும் முறையால் ஒருவருக்கொரு சண்டை இட்டுக் கொள்கிறோம். நாட்டில் அனைத்தையும் கண்டு பிடிக்கிறோம். ஆனால் மன நிம்மதி எப்படிக் கிடைக்கும் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. நாட்டில் இவ்வளவு வன்முறை நிகழும் போது மனநிம்மதி கிடைக்காது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். வன்முறையை தடுக்க அனைவரும் ஒரே அணியில் இணைந்தாக வேண்டும்” எனக் கூறினார்.
[youtube-feed feed=1]