டில்லி

ருமான வரி சட்டத்தில் மத்திய அரசு பல புதிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்று பிரதமர் மோடி நேர்மையாக வரி செலுத்துவோரைக் கவுரவித்து ஊக்கம் அளிக்கும் வகையில் ஒரு திட்டத்தை தொடங்கி வைத்தார்.   இந்த திட்டத்துக்கு ஹானரிங் தி ஹானஸ்ட் (நேர்மையானவர்களுக்கு மதிப்பு அளித்தல்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.   வருமான வரித்துறையில் இது மிக முக்கியமானதொரு சீர்திருத்தமாக சொல்லப்படுகிறது.

இதையொட்டி வருமான வரி தொடர்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தப் பல புதிய நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள பரிவர்த்தனைகளைக் குறித்த விவரங்களை வருமான வரிக்கணக்கின் போது வருமான வரித் துறைக்கு அவசியம் அளிக்க வேண்டும்.

அவை பின்வருமாறு:

  1. ஒரு வருடத்தில் ரூபாய் 1 லட்சத்துக்கு மேல் கல்வி தொடர்பான கட்டணம் மற்றும் நன்கொடைகள்
  2. ஒரு வருடத்தில் ரூபாய்1 லட்சத்துக்கும் அதிகமான மின்சாரபில்
  3. பிஸினல்க்ளாஸில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விமான பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணம்
  4. ரூபாய் 20,000க்குமேல் உள்ளஹோட்டல் பில்கள்
  5. ₹ 1 லட்சத்துக்கு மேல் நகைகள், மின்சாதன பொருட்கள், ஓவியங்கள், பளிங்கு போன்றவற்றை வாங்குவது
  6. 50 லட்சத்துக்கு மேல் வங்கியின் உள்ள நடப்பு கணக்கில் வைப்பு அல்லது வரவு
  7. நடப்பு கணக்கு அல்லாத பிறவங்கிக்கணக்கில், 25 லட்சத்துக்கு  வைப்பு அல்லது வரவு
  8. ஆண்டுக்கு ₹ 20,000க்குமேல் சொத்து வரி செலுத்துதல்
  9. ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ரூபாய் 50,000 க்கு மேல்
  10.  

    பங்கு பரிவர்த்தனைகள், டிமேட் கணக்கு, வங்கி லாக்கர்கள்

  11. ரூபாய் 20,000 க்கு மேலான மருத்துவ காப்பீட்டு பிரீமியம்

இதைத் தவிர வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு ஊதியத்தில் இருந்து அதிக விகிதத்தில் வருமான வரி பிடித்தம் செய்யவும் அரசு பரிந்துரை செய்துள்ளது.   ரூ. 30 லட்சத்துக்கு மேல் வங்கிப் பரிவர்த்தனை செய்வோர், அனைத்து தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள், உள்ளிட்ட பலருக்கும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் ஆக்க திட்டமிடப்பட்டுள்ளது.