கொழும்பு:

இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றார். இவரது பயணத்தை முன்னுட்டு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் 2 ஹெலிகாப்டர்களில் 3 தினங்களுக்கு முன்பு வெள்ளோட்ட பயணம் மேற்கொண்டனர்.

இதற்காக எம்1 17 ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வெள்ளோட்ட பயணத்தின் போது இலங்கை ஹட்டான் பகுதியில் உள்ள 5 வீடுகளின் ஆஸ்பஸ்டாஸ் கூரை பிய்த்துக் கொண்டு பறந்துவிட்டது. ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் இறக்கையில் இருந்து வெளியேறி காற்றின் வேகம் கூரையை சேதப்படுத்தியதாக வீடுகளின் உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்தார். இது குறித்து ஹட்டான் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விமான பைலட்கள் ஏற்கனவே வீடுகளின் கூரை மீது மணல் மூட்டைகளை அடுக்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. ரூ. 5 பில்லியன் செலவில் இந்தி அரசு கட்டியுள்ள மருத்துவமனையை திறந்து வைக்க மோடி அங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.