சென்னை:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 110க்கும் மேலான தொகுதிகளில் பாரதிய ஜனதா முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தனிப்பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், கர்நாடக பாஜ முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கும், பிரதமர் மோடி, மற்றும் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கர்நாடகாவில் பாஜக வென்றதற்கு பிரதமர் மோடியின் சிறப்பான செயல்பாடுகளே காரணம்” என்று பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.