டில்லி,
நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, தினத்தந்தியின் பவளவிழாவில் கலந்துகொண்டு விட்டு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி, மோடி கருணாநிதி சந்திப்பால் 2ஜி வழக்கில் பாதிப்பு ஏற்படாது என்று சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இறுதியாக பகல் 12.15 மணி அளவில் கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் வந்ததார். அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், , அவரை ஓய்வெடுக்க தனது டில்லி இல்லத்துக்கு வருமாறு அழைத்தார்.
இது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு காரணமாக கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் திமுகவை சேர்ந்த ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ள 2ஜி வழக்கில் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது.
ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜ தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில்,ஏற்கனவே இன்று 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிபதி அறிவித்திருந்ததால், பாஜ மூத்த தலைவராக சுப்பிரமணியன்சாமியும் சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சாமி, மயிலாப்பூரில் இருக்கும் அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படிதான் கருணாநிதியை மோடி சந்தித்தார். கருணாநிதியை மோடி சந்தித்தாலும் அது 2ஜி வழக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
வழக்கின் தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்பதால் அவகாசம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
ஒருவேளை இந்த வழக்கில் ஆ.ராசாவிற்கு விலக்கு கிடைத்தால் நிச்சயமாக உச்ச நீதிமன்றம் செல்வேன்” என்று கூறினார்.
சாமியின் இன்றைய பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.