டில்லி,

பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து டில்லி முதர்வர் கெஜ்ரிவால் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதன்பிறகு மோடி படிப்பு குறித்து பல்வேறு ஆவனங்கள் வெளியாகின. ஆனால் பிரதமர் மோடி தனது படிப்பு குறித்து எந்தவித தகவலையும் பொதுமக்களுக்கு அறிவிக்கவில்லை.

குஜராத் பல்கலைக்கழகம் ஒன்றில் மோடி எம்.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தார் என்று கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் கேட்டப்பட்டதற்கு,  பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது என குஜராத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும்,  தங்களது பல்கலைக் கழகத்தில் இருந்து தொலைநிலை கல்வி மூலம் மோடி எம்.ஏ. பட்டம் பெற்றதாக குஜராத் பல்கலைக் கழகம் கூறி உள்ளது.

இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களை மத்திய தகவல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

மேலும், மோடி பி.ஏ. பட்டம் குறித்த ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக் கழகத்திற்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், மோடியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது என குஜராத் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.