டில்லி:

பிரதமர் மீது தான் எம்பி உள்பட பலரும் புகார் கூறுவதை கேள்விபட்டிருக்கோம். ஆனால், நம் பிரதமர் தனது எம்.பி.க்கள் மீது புகார் கூறும் நிலை உருவாகியுள்ளது.

மோடி

நாடாளுமன்ற பாஜக குழு கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நான் நமோ செயலியில் தினமும் காலை வணக்கம் தெரிவிக்கிறேன். ஆனால், 4 அல்லது 5 எம்.பி.க்கள் மட்டுமே இதற்கு பதில் அளிக்கிறீர்கள். மற்றவர்கள் யாரும் காலை வணக்கம் சொல்வது கிடையாது. தினமும் காலை வணக்கத்துடன் பல முக்கிய தகவல்கள் இதில் பகிரப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

நாடாளுமன்றத்தில் பாஜக.வுக்கு 333 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் லோக்சபாவில் 276, ராஜ்யசபாவில் 57 எம்.பி.க்களும் உள்ளனர். பிரதமரின் பெயரில் முதல் இரண்டு எழுத்துக்களை பயன்படுத்தி நமோ ஆப் என்ற செயலி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கட்சியினர் மற்றும் எம்.பி.க்களிடம் கலந்துரையாடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது.

இதில் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தகவல்களை பிரதமருக்கு அனுப்பி பதில் பெற முடியும். உறுப்பினர்களும் இதில் தகவல்களை பதிய முடியும். இதன் மூலம் பிரதமர் மோடியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த செயலியை தான் பாஜக எம்.பி.க்கள் சரிவர பயன்படுத்துவதில்லை என்று பிரதமர் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

கூட்டத்திற்கு பின் இறுதியின் எம்.பி.க்கள் இந்த செயலியின் பயன்பாட்டை புரிந்து பயன்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.