டில்லி:

மோடி அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. திட்டமிட்டபடி வரும் அக்டோபர் முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ‘மோடி கேர்’ என்று அவரது கட்சியின் அழைத்து வருகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் உள்ள 10 கோடி ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் இந்த திட்டம் மத்திய சுகாதார துறை அமைச்சர் தலைமையில் செயல்படுத்தப்படவுள்ளது.

மாநில அரசுகள் இந்த திட்டத்தை ஏற்கனவே உள்ள அறக்கட்டளை, சொசைட்டி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தலாம். இதில் மாநில அரசும், மத்திய அரசும் 60:40 என்ற அடிப்படையில் செலவுத் தொகையை ஏற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் பயனாளிகள் பணமின்றி நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். எனினும் சிகிச்சைக்கான கட்டண விகிதத்தை அரசு தான் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]